குடிநீரில் கலந்த கழிவு நீரால் 2 பேர் பலி..2 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்..!
பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட இரண்டு அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட களத்தூர் கிராமம் ராயப்பன் நகர் பகுதியில் கடந்த வாரம் ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பேர் உயிரிழந்தனர். மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் ராயப்பன் நகரில் குடிநீர் ஆதாரம் அருகே கழிவுநீர் செல்வதை கண்டித்து களத்தூர் கிராம ஊராட்சி செயலாளர், அந்த பணியில் பணியாற்றி வரும் மண்டல துணை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதேபோல் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய இருவரும் தமிழ்நாடு ஊராட்சி சட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.





