கர்நாடகாவில் அடுத்தடுத்து 2 முறை நிலஅதிர்வு..!
சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள ஹொஷஹள்ளி, தொட்டிஹள்ளி, பந்த ஹள்ளி ஆகிய கிராமங்களில் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவு கோலில் 3 ரிக்டர் ஆக நில அதிர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிஜப்பூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் மையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவின் பல மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அங்குள்ள மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





