2 புலிகளை விரட்டியடித்த கரடி…
இரண்டு புலிகளை, கரடி ஒன்று விரட்டியடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ராம்பூர் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் புதர் ஓரம் கரடி நின்று கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த புலி ஒன்று கரடியை பின்தொடர்ந்து சென்று சீண்டியது.
இதை கண்டு அஞ்சி முதலில் பின்வாங்கி சென்ற கரடி, புலி பின் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்து விரட்டத் தொடங்கியது. முதலில் வந்த புலியையும் பிறகு அதே பகுதியில் படுத்து கிடந்த இன்னொரு புலியையும் விரட்டியடித்து விட்டு வெற்றிக்களிப்பில் கரடி திரும்பி சென்றது. இந்த வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.






