சிறார் ஆபாச படங்களைப் பரப்பிய 2 பேர் கைது
கன்னியாகுமரியில் சிறார் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பரப்பிய இரண்டு பேரை கைது செய்து இருப்பதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் சிறார் ஆபாசபடங்கள் பரப்புவதை தடுக்க காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இணையதளங்களில் இருந்து ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை மற்றவர்களுக்கு பரப்பிய குளச்சல் வெற்றிவேல் புரத்தை சேர்ந்த விவேக், எள்ளுவலை பகுதியை சேர்ந்த கலாதரன் ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆபாச படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மட்டுமின்றி பரப்புவதற்கு துணைபோகும் வாட்ஸ்அப் குழுவின் அட்மின்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவார்கள் எனவும் கூடுதல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்தார்.






