--- --:--:-- --

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் 18 லட்சம் மாயமானதாக புகார்

6

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட விவகாரத்தில் 18 லட்சம் ரூபாய் மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

செங்கல்பட்டு அருகே பரனூரில் மூன்று தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அடிதடி மோதலில் சுங்கச்சாவடி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த நிலையில் சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த பதினெட்டு லட்சம் ரூபாய் காணாமல் போய்விட்டதாக சுங்கச்சாவடி மேற்பார்வையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சூறையாடப்பட்ட தினத்தில் மர்ம நபர் ஒருவர் முகத்தில் துணி கட்டியவாறு அங்கிருந்த அறையில் நுழைந்து பொருட்களை சேதம் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

உடலில் பையை மாட்டியபடி வரும் அந்த நபர் அங்கிருந்து லாக்கரில் இருந்த ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசுவது பதிவாகியுள்ளது. அந்த நபர் யார் பை நிறைய பணம் எடுத்துச் சென்றாரா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.

Leave a Reply

Right Menu Icon