ஹரியானா நூ பகுதியில் 144 தடை உத்தரவால் வெறிச்சோடிய வீதி..!
ஹரியானாவின் நூ பகுதியில் உள்ள பகுதியில் வழிபாடு நடத்தியதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஹரியானாவின் கடந்த முறை கலவரம் ஏற்பட்ட நூ பகுதியிலுள்ள சிவன் கோயிலை நோக்கி ஊர்வலம் நடத்த போவதாக சர்வ இந்து மகா பஞ்சாயத்து அமைப்பு தெரிவித்தது.
அதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி ஊர்வலம் நடைபெறும் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து 15 துறவிகள் கொண்ட குழுவை கோயிலில் வழிபட மாநில அரசு அனுமதி அளித்தது.
மீண்டும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோயிலை சுற்றிலும் ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டனர். சோபா யாத்ரா என்ற பெயரில் கோயிலில் துறவிகள் குழு வழிபாடு நடத்தியது.
முன்னதாக நூ பகுதியில் வங்கிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. குருகிராமில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.





