--- --:--:-- --

நிறுத்தி வைக்கப்பட்ட காரிலிருந்து 13 லட்ச ரூபாய் பணம் திருட்டு..!

4

பெங்களூருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து பணம் திருடப்பட்ட சிசிடிவி காட்சியை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே ஒரு இளைஞர் முதலில் நோட்டமிருக்கிறார்.

 

அவருக்கு உதவியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி ஒரு நபர் காரின் அருகே தயாராகி இருக்கிறார். திடீரென காரில் ஓட்டுநர் இருக்கை. ஜன்னல் கண்ணாடியை உடைக்கும் அந்த இளைஞர் உள்ளே புகுந்து பொறுமையாக பணத்தை திருடி வெளியே எடுக்கிறார்.

 

இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் அவர் ஏறியதும் இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்வதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

 

தகவல் அறிந்து விசாரணை செய்த காவல்துறையினர், காரில் இருந்து 13 லட்சம் திருடப்பட்டதாக தெரிவித்துள்ளனர். காரின் விலை உயர்ந்த பொருட்கள் பணம் ஆகியவற்றை வைத்து விட்டு சென்றது பாதுகாப்பானது அல்ல என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

 

Right Menu Icon