12,000 டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்..!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதற்காக அதிமுக எம்எல்ஏ வின் ஆதரவாளர்கள் கொண்டுசென்ற 12,000 டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனால் அவர் கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டு இருந்தார். எம் எல் ஏ சந்திரசேகரன் எருமப்பட்டி உள்ளிட்ட பணிகளில் வாக்கு சேகரிக்க சென்ற போது சந்திரசேகர் உடன் வந்த வானங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் ஒரு டாடா சுமோ வாகனத்தில் 12 ஆயிரம் டோக்கன்கள் கைப்பற்றப்பட்டது. ஓட்டுநர் முகமது பைசலிடம் விசாரித்தபோது வாக்களர்களுக்கு டோக்கன்களை வினியோகித்து அதன் மூலம் பரிசு பொருட்கள் வழங்கி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதேபோல் வடுகப்பட்டி பகுதியிலும் சந்திரசேகரின் ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கி வினியோகம் செய்து கொண்டிருந்தபோது அதிமுகவினர் அதனை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து புகார் அளித்தனர்.






