--- --:--:-- --

கோவையில் நீண்ட நாட்களாக உணவருந்தாமல் மயங்கி விழுந்த 12 வயது பெண் யானை.மீட்பு நடவடிக்கைகளில் வனத்துறையினர் தீவிரம் !!!

1.2

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட சிறுவாணி மலை அடிவாரம் ஏராளமான காட்டு யானைகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சாடிவயல் அடுத்த போரத்தி பழங்குடியினர் கிராமம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று படுத்து இருப்பதாக பழங்குடியின மக்கள் போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவர்கள் குழுவுடன் சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் அந்த யானை 15 வயதுடைய பெண் யானை என்பதும்,நீண்ட நாட்களாக உணவருந்தாமல் நலிவடைந்திருந்ததும் தெரியவந்தது.மேலும்,வயிற்று வலியின் காரணமாக யானை படுத்து இருந்த இடத்தை சுற்றிலும் உருண்டு அவதிப்பட்டது தெரியவந்தது.

 

இதனையடுத்து கால்நடை மருத்துவர் சுகுமார் யானையினை பரிசோதனை செய்து குளுக்கோஸ் மற்றும் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்கினார்.மேலும், கடந்த இரண்டு நாட்களாக யானை அருகில் முகாமிட்ட வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து கால்நடை மருத்துவர் சுகுமார் கூறும்போது கோவை மண்டலத்தில் தற்போது வரை 16 யானைகள் நோய்வாய்ப்பாட்டு இறந்திருக்கிறது.இது கடந்த ஆண்டைக்காட்டிலும் அதிகம் எனவும், சிறுமுகை வனச்சரகத்தில் மட்டும் மூன்று யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.தற்போது யானைகள் வயிறு கோளாறு,கல்லீரல் சம்பந்தபட்ட பிரச்சனை காரணமாகத்தான் உயிரிழப்பதாகவும், இந்த யானை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், தொடர்ந்து உயிரைக்காப்பாற்ற போராடி வருவதாகவும் தெரிவித்தார்.

 

மேலும்,நேற்றை காட்டிலும் இன்று உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு யானைகள் இறப்பு குறித்து தனிக்குழு அமைத்து ஆராய்ந்து வருவதை குறிப்பிட்ட மருத்துவர் சுகுமார் யானைகளின் உணவு பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமும் ஒரு காரணம் என்றும்,தற்போது வரை உணவருந்தாமல் உடல் நலிவடைந்து நான்கு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரவித்தார்.மேலும், விவசாய நிலங்களில் பயிர்களுக்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லிகளும் யானைகளுக்கு நஞ்சாக மாறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon