--- --:--:-- --

50 அடி ஆழத்தில் தவறி விழுந்த 11 காட்டு பன்றிகள்

7

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உணவு தேடி தவறி விழுந்த 11 காட்டு பன்றிகளை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அத்தி குப்பத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக 50 அடி ஆழ விவசாய கிணறு உள்ளது.

 

இரவு நேரத்தில் உணவு தேடி வந்த 11 காட்டு பன்றிகள் தவறி கிணற்றில் விழுந்து தத்தளித்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி பன்றிகளை மீட்டனர். வெளியே கொண்டுவரப்பட்ட பன்றிகள் தீயணைப்பு வீரர்களை கடிக்க வந்ததால் மீட்பு பணி தாமதமானது.

 

Right Menu Icon