--- --:--:-- --

மோடி வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகம் வருகிறார்..!

4

பிரதமர் நரேந்திர மோடி வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகம் வருகிறார் .டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் தமிழகம் வரும் பிரதமர் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். இந்தச் சூழலில் பிரதமர் மோடி வருகிற 14-ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழ்நாட்டில் அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் போது கட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

 

இதனை தவிர்த்து தமிழக பாஜக தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon