ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை ராஷ்மி..!
தமிழ் நடிகர் சாந்தனு நடித்து வெளியான படம் கண்டேன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராஷ்மி. இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.
தற்பொழுது ராஷ்மி நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவரும் சுதிரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால் இருவரும் மறுத்து விட்டனர். இந்நிலையில் ராஷ்மி தொழிலதிபர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி ராஷ்மி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் மறுப்பும் தெரிவிக்கவில்லை. சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வரும் ராஷ்மி அவருடைய திருமணத்தை ஏன் மறைக்க வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





