--- --:--:-- --

கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதி விபத்து

1

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பத்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வழக்கமாக ஏராளமான வாகனங்களுடன் பரபரப்பாக இயங்கும் வேலூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது.

 

முன்னே செல்லும் வாகனங்கள் பார்வைக்குத் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்தாங்கள் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த ஒரு லாரி மீது பின்னால் வந்த லாரி, கார்கள் என ஒன்பது வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. அந்த வாகனங்களில் இருந்து 10க்கும் அதிகமானோர் படுகாயமுற்றனர்.

 

அவர்கள் அனைவரும் வாலாஜாபேட்டை மற்றும் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல அரியலூர் மாவட்டத்திலும் கடும் பனி மூட்டத்தால் லாரி ஒன்று சாலையோர கடைகளில் புகுந்து விபத்திற்குள்ளானது.

ஜெயங்கொண்டம் அருகே சின்னவிளை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த லாரி சாலையிலிருந்து திசைமாறி மின்கம்பத்தில் மோதி உடைத்துவிட்டு கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்தது. அங்கிருந்த பொருட்கள் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Leave a Reply

Right Menu Icon