--- --:--:-- --

சாலையை கடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு..!

10

நீலகிரியில் இரவில் சாலையை கடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வீடியோ காட்சிகள் வெளியானது. இதனையடுத்து இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

 

கூடலூரில் இருந்து மைசூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ளதாகவும் இந்த நேரங்களில் பகல் நேரங்களில் மட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கம்.

 

இந்த நிலையில் நேற்று 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மெதுவாக சாலையை கடந்தது. மலைப்பாம்பு சாலையை கடந்து சென்ற பின்னரே இருபுறமும் இரண்டு வாகனங்கள் சென்றன.

 

இந்நிலையில் இரவு நேரங்களில் வேகத்தை குறைத்து வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மலைப்பாம்பு சாலையை கடக்க முயன்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

Right Menu Icon