--- --:--:-- --

பள்ளி வகுப்பறையில் ராகிங் செய்த 5 மாணவர்கள் இடை நீக்கம்..!

9

திருவண்ணாமலை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ராகிங் செய்த மாணவர்கள் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

 

இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பள்ளியில் வகுப்பறையில் மாணவர்களை ராக்கிங் செய்து நடனமாட வைப்பது போன்ற வீடியோ காட்சி இணையத்தில் பரவியது. நடனமாட மாணவர்களை அடித்து துன்புறுத்திய காட்சிகள் பரவி பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ வெளியானதை அடுத்து ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை தற்காலிகமாக இடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

 

Right Menu Icon