திருவள்ளூர் மாவட்டத்தில் காரில் கொண்டுவரப்பட்ட 1 கோடி ரூபாய் பறிமுதல்..!
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக பதிவு எண் கொண்ட கார் வந்தது. போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இன்றியும், முன்னுக்குபின் முரணாக கூறியதால் ஆந்திராவில் இருந்து எடுத்து வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக 3 பேரை பிடித்து தனி அறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஒரு கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான தகவல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.






