புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..!
வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை தொடங்கியது.
எனினும், இவ்வாண்டு நவம்பரில் மழையின் அளவு இதுவரை குறைவாகவே உள்ளது.இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் 21ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மறுநாள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.





