யூடியூபர் டிடிஎப் வாசன் கைது..!
காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. பெங்களூர் சென்னை விரைவுச் சாலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு டிடிஎப் வாசன் சென்றார்.
அதி வேகமாக பயணம் செய்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே முன் சக்கர வாகனத்தை வீலிங் செய்த பொழுது நிலைதடுமாறினார். அவரது வாகனம் சாலை ஓரம் தடுப்பை மோதி பறந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, சிறு காயங்களுடன் டிடிஃப் வாசன் உயிர் தப்பித்தார்.
விபத்து காரணமாக டிடிஎப் வாசனின் வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிய வந்தது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.





