--- --:--:-- --

காரைக்குடியில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!

2

காரைக்குடியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். காரைக்குடி ரயில் நிலையம் அருகே வசித்து வந்த பஞ்சவர்ணம் என்பவருக்கு செல்போனில் நள்ளிரவில் அழைப்பு வந்துள்ளது.

 

இதனையடுத்து வீட்டின் அருகே வந்து பேசிக்கொண்டு இருந்தபோது அவருடன் மர்ம நபர் ஒருவர் பேச்சு கொடுத்தார். தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் பஞ்ச வர்ணத்தை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. கொலை செய்து தப்பி ஓடிய நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon