பிறந்தநாளன்றே உயிரிழந்த இளைஞர்..!
பிறந்தநாள் அன்று மது விருந்தின்போது நண்பர்கள் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழபுரத்தை அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து.
பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக் வேலைகளை செய்து வந்தார். இவர் பிறந்த நாள் திங்கட்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் நண்பர்களுக்கு மது விருந்து வைத்துள்ளார். அப்பொழுது நண்பர்களான ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் மாரிமுத்துவை கன்னத்தில் அறைந்தனர்.
இதில் அவர் மயங்கி விழுந்தவுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நண்பர்கள் ராமமூர்த்தி , லோகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



