தனது மாற்றுத்திறனாளி தாயை 230 கி.மீ தோளில் சுமந்தபடி சொந்த ஊர் சென்ற இளைஞர்!
ஈரோடு அருகே மாற்றுத்திறனாளி தாயாரை தோளில் சுமந்தபடி சொந்த ஊர் திரும்புகிறார் கூலித் தொழிலாளி ஒருவர். ஈரோடு மாவட்டம் மூஞ்சலூர் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சொந்த கிராமத்தை அடைய 230 கிலோ மீட்டர் தூரத்தை நடை பயணத்தை மேற்கொண்டது 15 பேர் கொண்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் குழு ஒன்று.
மஞ்சள் அறுவடைக்காக மூஞ்சலூரில் தங்கியிருந்தவர்கள் பொது முடக்கத்தால் மூன்று வாரங்களுக்கு மேல் வேலை இல்லாமல் உள்ளனர். அன்றாட உணவுக்கே சிரமம் மேற்பட்ட நிலையில் நடந்தே சொந்த கிராமத்திற்கு செல்ல முடிவெடுத்தார்கள் . அந்தக் குழுவிற்கு சமையல் செய்ய வந்த மாற்றுத்திறனாளி வயது பெண்ணை அவரின் 18 வயது மகனே தோளில் சுமந்து வருகிறார்.
பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் புதுவாய்க்கால் அருகே 15 பேர் குழு உடைமைகளுடன் நடந்து செல்வதை பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கூலி வேலைக்காக ஊஞ்சலூர் கிராமத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு உணவு வழங்கி அதிகாரிகள் வாகனத்தின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.







