கணவர் வீட்டு முன் கழுத்தை அறுத்துக்கொண்டு இளம்பெண் தர்ணா..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்துக்கொண்டு கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். புலிவலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரை இளம்பெண் ஆர்த்தி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கரம்பிடித்தார்.
திருமணத்திற்கு போட்ட 37 சவரன் நகையும் 10 லட்சம் ரூபாயையும் ஆர்த்தி கணவர் வீட்டில் கொடுக்காததால் மாமியார், மருமகள் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தாய் வீட்டிற்கு சென்ற ஆர்த்தி 5 மாத ஆண் குழந்தையுடன் மாமியார் வீட்டிற்கு திரும்பி வந்து கணவரை தம்முடன் சேர்த்து வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கு மாமியார் மறுத்ததால் மனமுடைந்த ஆர்த்தி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஆர்த்தியை மீட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.







