கூகுள், ஆப்பிள் நிறுவனங்களில் பணி செய்வதற்கு பட்டப்படிப்பு அவசியமில்லை..!
ஆப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ், சீமன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பணி செய்வதற்கு கல்வித் தகுதியாக பட்டப்படிப்பு அவசியம் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும் இது தொழில்துறையின் விதிமுறை ஆகவே விரைவில் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்ட 50 சதவீதம் பேர் நான்காண்டு கல்லூரி பட்டப்படிப்பு தகுதி இல்லாதவர்களை என்று அதன் சிஇஓ டிம் குக் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
வேலை செய்வதற்கு தேவையான திறனை பெரும்பாலான கல்லூரிகள் கற்று தருவதில்லை என கூறியபோது அவர் சுட்டிக்காட்டியிருந்தார். எலக்ட்ரீசியன், மெக்கானிக்கல் டிசைனர், மார்க்கெட்டிங் பிரதிநிதிகள் போன்ற வேலைகளில் பட்டதாரி அல்லாதவர்களே நியமிக்கப்படுகின்றனர் என்பது நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.






