--- --:--:-- --

பாலிவுட் பிரபலங்களுடன் யோகி ஆதித்யநாத் ஆலோசனை!

1

மும்பையில் பாலிவுட் பிரபலங்களுடன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். உத்திரபிரதேசத்தின் லக்னோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரபலப்படுத்துவதற்காக மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சென்றுள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாலிவுட் பிரபலங்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

அப்போது பேசியவர் உத்திர பிரதேசத்தில் வெப் சீரிஸ் படம் ஆக்கினால் மானியம் வழங்கப்படும் எனவும் ஆய்வகங்கள் மற்றும் ஸ்டூடியோக்கள் அமைக்க 25% மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon