பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் யோகா பயிற்சி முகாம்!
திருப்பூர், திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் இலவச யோகா பயிற்சி முகாம் வகுப்புகள் நேற்று தொடங்கியது. யோகா பயிற்சி முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி, செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி அறிவியல் ஆசிரியை கவிதா வரவேற்றார். திருமுருகன்பூண்டி, ராக்கியப்பாளையத்தில் ஸ்ரீ யோகாலயா யோகா சென்டரை நடத்தி வரும் யோகா ஆசிரியர் எஸ். சங்கர் மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தார். முகாமில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் 37 பேர்கள் பங்கேற்று யோகா பயிற்சியினை ஆர்வமுடன் செய்தனர். இந்த இலவச யோகா பயிற்சி முகாம் வாரத்தில் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி முதல் 4 மணி வரை நடைபெறுகிறது.

யோகாவில் ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் வரும் காலங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் கூறினார். முடிவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சஃபியுல்லா நன்றி கூறினார்.





