--- --:--:-- --

கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரிக்கு 11 பேருக்கு பணி ஆணை..!

1

ந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.

 

தமிழகத்தில் 10 இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என மானிய கோரிக்கையின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கொளத்தூர், திருச்செங்கோடு, தொப்பம்பட்டி, விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் கல்லூரிகளை தொடங்க கடந்த 6ஆம் தேதி அரசாணையும் வெளியானது.

 

அதன்படி சென்னை கொளத்தூரில் எர்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடப்பு கல்வி ஆண்டிலேயே கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

 

மேலும் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் 9 உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி ஆசிரியர் ஆகிய அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார். தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பிகே சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Right Menu Icon