--- --:--:-- --

மகளிர் உரிமை தொகை – விண்ணப்பம் உங்களுக்கு நிராகரிப்பா..?

1

களிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கருதுபவர்கள் இசேவை மையங்கள் மூலம் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

கடந்த 15ஆம் தேதி மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிலையில் லட்சக்கணக்கானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தமிழக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

இதில் விண்ணப்பத்தின் முடிவு நிலை இன்று முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் மறு விண்ணப்பம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பயனாளர்களுக்கான ஏடிஎம் கார்டு அட்டை வங்கியில் இருந்து வர பெறும் என்றும் ஏடிஎம் கார்டு செயல்படுத்த வங்கி கிளைகளை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon