திருப்பதியில் குறைந்த கூட்டம்… ஒரு மணிநேரத்தில் தரிசனம்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் குறைந்துள்ளது. ஸ்ரீவாரி இலவச தரிசனத்தில் வெறும் 6 மணிநேரத்திலும் கட்டண தரிசனத்தில் ஒரு மணி நேரத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் திருமலை திருப்பதியில் எந்நாளும் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும்.
2 நாட்கள், 3 நாட்கள் காத்திருந்து கூட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். இதனால் இலவச தரிசனத்துக்கான வைகுந்தம் காம்ப்ளக்ஸ் நிரம்பி வழியும். அதையும் தாண்டி பக்தர்கள் வரிசையில் காத்திருப்பார்கள், இந்நிலையில் கடந்த 3 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிரடியாக குறைந்துள்ளது.





