பெருந்தொற்று ஆராய்ச்சிக்காக முதன் முறையாக பெண்ணின் உடல் தானம்..!
பெருந்தொற்று ஆராய்ச்சிக்காக முதன் முறையாக பெண்ணின் உடல் தானம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் பிறந்து கொரொனாவுக்கு பலியான 94 வயது உடைய ஜோஸ்னா என்ற பெண்ணின் உடல் ஆய்வுக்காக தானமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண் ஒருவரின் உடல் ஆய்வுக்காக வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இது குறித்து பேசிய மருத்துவர் பெருந்தொற்றால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிய இந்த ஆய்வு உதவும் என கூறியுள்ளார்.




