ஜாதகம் பார்ப்பதாக கூறி நகையை திருடி சென்ற பெண்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதூர் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் மனைவி ஜெயசு பிரபா வீட்டில் தனிமையில் இருந்த பொழுது கைரேகை ஜாதகம் பார்ப்பதாக தேவ லட்சுமி என்ற சூனியக்கார பெண் வீட்டில் வந்து கைரேகை பார்த்துள்ளார்.
அப்பொழுது பல பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி ஐம்பதாயிரம் ரூபாய் மற்றும் ஏழு சவரன் நகையையும் எடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து ஜெயா பிரபா கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த ஜெயலட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





