--- --:--:-- --

புற்றுநோயால் வறுமையில் வாடும் குடும்பத்தை காப்பாற்ற போராடும் பெண்!

8

புற்றுநோயோடு,வறுமையில் வாடும் குடும்பத்தை காப்பாற்ற போராடும் பெண் கடந்த 2009ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி,கண்ணன்-மஞ்சுளா ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.இவர்கள் குடும்பத்தோடு சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர்.

 

இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த குடும்பத்திற்கு திடீர் திருப்பங்களாள் வாழ்க்கையை தலைகீழாக மாறியுள்ளது.கட்டிட வேலை செய்து கொண்டிருந்த கண்ணன் அவர்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு தலையில் பலகை விழுந்ததால் கை கால்கள் செயலிழந்து போனது,தனது குடும்ப பொறுப்பினை மஞ்சுளா முழுவதுமாக ஏற்றுக் கொண்டாடு,துப்புரவு பணிக்கு மாதம் 1500 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்துகொண்டு வந்தார்.

 

மஞ்சுளா விற்கும் கடந்த 2018ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மோசமான சம்பவங்களால் வறுமையோடும், வேதனையோடும் வாழும் சூழ்நிலைக்கு கண்ணன்- மஞ்சுலா குடும்பம் தள்ளப்பட்டுள்ளது.தொண்டை புற்றுநோய்யை குணப்படுத்தவும்,கண்ணனுக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு மட்டும்,தொண்டு நிறுவனத்திற்கு கண்ணன்-மஞ்சுளா குடும்பம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon