இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்த பெண்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரவினில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் தூக்கி வீசப்பட்ட பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் உயிர் இழந்துள்ளார். நிம்மியம்பட்டு பகுதியில் ஒருவர் அரவினில் மில் நடத்தி வருகிறார்.
நூலக பணியாளர் ஆன இவரது மனைவி கனிகா இன்று விடுமுறை என்பதால் கணவருக்கு உதவியாக அரவேனில் அரைத்துக் கொண்டிருந்த நிலையில் விபத்து நேர்ந்தது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்தற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





