--- --:--:-- --

மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு விருப்ப மனு செய்தவர்களுக்கு கட்டணம் வாபஸ் – அதிமுக மேலிடம் அறிவிப்பு

jayalalitha-statue2

மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிட விரும்பி கட்டணம் செலுத்தி விருப்ப மனு செய்தவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என அதிமுக மேலிடம் அறிவித்துள்ளது.

 

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் கடந்த 15, 16 தேதிகளில் விருப்ப மனு பெறப்பட்டது. விண்ணப்ப கட்டணமாக ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட தொகையும் வசூலிக்கப்பட்டது.

 

தற்போது மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பதவிகளுக்கு போட்டியிட விரும்பி விருப்ப மனு அளித்தவர்கள பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

 

அதே வேளையில், மாநகராட்சி மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு ஏற்கெனவே விருப்ப மனு அளித்தவர்கள் மாநகராட்சி, நகர மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட, புதிதாக விருப்பமனு அளிக்கலாம் எனவும் அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon