--- --:--:-- --

குரூப் 1 தேர்வில் வென்று சாதனை…! இராமநாதபுரம் அருகே குக்கிராமத்தை சேர்ந்த இளம்பெண் டிஎஸ்பி பதவிக்கு தேர்வு!!

fg

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவடிமிதியூர் V.தொத்தார்கோட்டை என்ற சின்னஞ் சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்-வாசுகி தம்பதியரின் மகள் ராஜபிருந்தா (26).இவர், டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்1 தேர்வில் 85-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்று டி.எஸ்பி ஆக பதவி ஏற்க உள்ளார்.

 

பொறியியல் பட்டதாரியான ராஜபிருந்தா, 1-ம் வகுப்பு முதல் 8ம் வரை திருவாடானை ராஜன் மெட்ரிக் பள்ளியில் படித்தார். அதன் பிறகு 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தேவகோட்டை தனியார் பள்ளியிலும், +2 படிப்பை காரைக்குடிவிலும் முடித்தார். அதன் பிறகு பொறியியல் படிப்பை காரைக்குடி அழகப்பாவில் படித்தார்.

 

ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசின் உள்ளாட்சி நிதி மற்றும் தணிக்கை துறையில் உதவி ஆய்வாளராக சென்னையில் ராஜபிருந்தா பணியாற்றி வந்தார். இருந்தாலும் நாம் பிருந்தாவின் விருப்பம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று அரசுத் துறையில் உயர் அதிகாரியாக வேண்டும் என்பதே. இதை லட்சியமாகக் கொண்டு அரசு பணியில் இருந்த போதும், பணி நேரம் போக மீதி நேரத்தை வீணடிக்காமல் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயற்சி பெற்றார். அவருடைய லட்சியமும் நிறைவேறி தற்போது கு௹ப் 1 தேர்வில் தேர்ச்சியும் பெற்று, காவல் துணைக் கண் காணிப்பாளராக விரைவில் அரசு பணியில் சேர உள்ளார்.

 

இது பற்றி ராஜபிருத்தா கூறுகையில், நாம் என்னவாக வேண்டும் என்பதை தீர்மானித்து அதே லட்சியத்துடன் கல்வி கற்க வேண்டும், படிக்கும்போது புரிந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு படித்தால் எந்த ஒரு கடினமான தேர்வையும் எளிதில் வெற்றி பெற்று நாம் நினைத்ததை சாதிக்கலாம். தற்போதைய கல்வி முறையும் புரிந்து கொள்ள ஏதுவாகவும் உள்ளது. 11, 12ம் வகுப்பு படித்து தேர்வு எழுதுவதற்கும் சுல்லூரியில் படித்து தேர்வை எழுதுவதற்கும் முற்றிலும் வேறுபாடு உள்ளது. எனவே பள்ளி, கல்லூரி தேர்வெழுதும் முறைகளை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

 

அத்தோடு, எனது பயிற்சி காலத்தை சிறப்பாக முடித்து பணியில் சேர்ந்த பிறகு பணியில் நேர்மையாகவும், ஏழை எளிய மக்களை சந்தித்து அவர்களது குறைகளை சட்ட திட்டத்திற்குட்பட்டு நிறைவேற்றுவேன். மேலும் எனது பணியினை சிறப்பாக செய்து எனது பெற்றோருக்கும் எனது ஊர் மக்களுக்கும் பெருமை தேடிக் கொடுப்பேன் என்று ராஜபிருந்தா தெரிவித்தார்.

 

இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, குரூப் 1 தேர்வில் சாதித்து, டிஎஸ்பி பதவியேற்க ராஜ பிருந்தாவுக்கு சொந்த கிராம மக்களும், உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon