விஜய் பிளானில் மாற்றம்..!
வரும் 27-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் சேலம் சுற்றுப்பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. முன்னதாக 27-ம் தேதி சென்னை, திருவள்ளூரில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார்.
ஆனால் அதில் மாற்றம் செய்து, நாமக்கல், சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சேலத்துக்கு பதிலாக கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.






