எங்கெங்கு 100% பேருந்துகள் இயக்கம்..?
விழுப்புரம் மாவட்டத்தில் காலை 6 மணி நிலவரப்படி 5 பனிமனைகளில் இருந்து 220 பேருந்துகளில் 205 பேருந்துகள் இயக்கப்படுகிறது. செங்கல்பட்டு மதுராந்தகம் பணிமனையில் இருந்து 100% பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதுரையில் 99.07 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 8 பணிமனைகளில் இருந்து 85 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஈரோடு போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணி நிலவரப்படி 76 பேருந்துகளில் 54 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளில் இருந்து காலை 6 மணி நிலவரப்படி 208 பேருந்துகளில் 168 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் நூறு சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டையில் பணிமனையில் இருந்து 60 பேருந்துகளில் 47 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் காலை 6 மணி நிலவரப்படி 9,764 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக 60 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
திருவாரூரில் 50 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 19 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 220 பேருந்துகளில் 205 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதாவது 92 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 100% பேருந்துகள் இயக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 பணிமனைகளில் இருந்து 319 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.





