அவர்கள் எங்களை திட்டும்போது, நாங்கள் திட்டாமல் இருக்க முடியுமா? – அமைச்சர் செல்லூர் ராஜு
இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய புதிய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (MOTN) கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. 2026 ஜனவரி நிலவரப்படி தமிழ்நாட்டில் தற்போதே தேர்தல் நடந்தால், ஆளும் திமுக தலைமையிலான இந்தியா (INDIA) கூட்டணிக்கு 2024 மக்களவை தேர்தலில் 47% வாக்குகள் கிடைத்த நிலையில், தற்போது தேர்தல் நடந்தால் 45% கிடைக்கும்.
2024 மக்களவை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு 41% வாக்குகள் கிடைத்த நிலையில் தற்போது நடந்தால் 33% கிடைக்கும். மற்ற கட்சிகளுக்கு 22% கிடைக்கும் நிலையில் அதில் தவெக-வுக்கு 15% வாக்குகள் கிடைக்கும் என கணிப்பு.
கடந்த 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021-ல் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். திருநெல்வேலி தொகுதி மக்கள் எனது உடன்பிறந்த சகோதரர்களை போன்றவர்கள். என்னை அவர்களின் வீட்டில் ஒரு பிள்ளையாக பார்க்கிறார்கள். எப்போதும் என்னையும் திருநெல்வேலி தொகுதி மக்களையும் பிரித்து பார்க்க முடியாது. 2026-ல் திருநெல்வேலி தொகுதி பாஜகவின் பட்டியலில் இடம்பெறும்.
திருநெல்வேலி தச்சநல்லூரில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள புதிய உயர்மின் கோபுரத்தை திறந்து வைத்த நயினார் நாகேந்திரன் பேட்டியில் அளித்துள்ளார்.





