ரிசர்வ் வங்கியில் என்ன நடக்கிறது?
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது நிதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவிர்க்க இயலாத தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பணியில் இருந்து விலகுகிறேன் என ரிசர்வ் வங்கியின் துணை அலுவலர்களில் ஒருவரான ஆச்சார்யா ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவர் தனது பணியில் இருந்து ராஜினாமா செய்வது இயல்பானது தானே? என்ற கேள்வி எழலாம்.
ஆனால் ஆச்சார்யாவின் ராஜினாமா இயல்பானதோ அல்லது திடீரென நடந்ததோ அல்ல. கடந்த ஆண்டுகளில் இருந்த நடந்த நிகழ்வுகளின் நீட்சியாகவே ஆச்சாரியாவின் பதவி விலகலை பார்க்க இருக்கிறது. 2018 அக்டோபரில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு ஈடுபடுவது ஆச்சாரியாவின் சர்ச்சைக்கு உள்ளானது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க அவசர கால நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு கேட்ட போது அவசர கால நிதியை அரசு கருவூலத்திற்கு மாற்றினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் என ரிசர்வ் வங்கி மறுத்தது. இதனால் அப்போதைய ஆளுநருக்கும், மத்திய அரசுக்குமான மோதல் உச்சியில் இருந்தது.
அந்த நிலையில் ஆளுநருக்கு ஆதரவாகவே ஆச்சாரியார் பேசினார் என்று தகவல் வெளியாகின. வங்கி மூலதன விகிதம், வாரக்கடன் போன்ற விவகாரங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் மோதல் தொடரவே பதவிக்காலம் முடிய ஓராண்டு மிச்சம் இருக்கும் போதே அந்த ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே போல ஆச்சாரியாவும் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த ஆளுநர் ராஜினாமா செய்த 6 மாதங்களிலே ஆச்சாரியாவும் ராஜினாமா செய்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் உச்ச பதவியில் இருக்கும் இருவர் 6 மாத இடைவெளியில் ராஜினாமா செய்வது இந்திய வரலாற்றில் இது தான் முதல்முறை. ரிசர்வ் வங்கி போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்புகளில் பதவி வகிப்பவர்கள் அருடுக்கு எதிராக குரல் கொடுப்பதும், அடுத்து ராஜினாமா செய்வதும் இந்திய பொருளாதாரத்திற்கு இன்னும் சொல்லபோனால் இந்திய ஜனநாயகத்திற்கே நல்லதை தராது என கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




