--- --:--:-- --

புவி வெப்பமடைவதால் நடக்கப்போவது என்ன? அறிவியலாளர்கள் எச்சரிக்கை!

7

புவி வெப்பமடைவதால் 2100 ஆம் ஆண்டில் கடல் மட்டம் ஒரு மீட்டருக்கு மேல் உயரக்கூடும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள பருவநிலை தாக்க ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் புவி வெப்பமடைதல் குறித்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர்.

 

2100 ஆம் ஆண்டில் புவி வெப்ப நிலை இப்போது உள்ளதைவிட 3 அரை டிகிரி செல்ஷியஸ் அதிகரித்து அதன் விளைவாக கடல் மட்டம் 130 சென்டி மீட்டர் உயர்ந்து விடும் என்று தெரிவித்துள்ளனர். 2300 ஆம் ஆண்டில் அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆகியவற்றின் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் 5 மீட்டர் உயரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

இப்போதைய நிலவரப்படி உலக மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் அதாவது 77 கோடி பேர் கடலில் உயர் அலை மட்டத்திற்கு மேல் 5 மீட்டருக்கும் குறைவான உயரம் உள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon