தமிழகத்தில் இன்று வானிலை எப்படி?
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்ற போதும், பெரும்பலான இடங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதாக தெரிவித்துள்ள வானிலை மையம், இதன் காரணமாக தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த வாரம் சற்று குறையக் கூடும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதேநேரம், தமிழகத்தின் பிற பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் ஒரு சில இடங்களில் பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்படலாம் எனவும், சென்னையைப் பொறுத்தமட்டில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.





