பீகார் நிலை தமிழகத்திற்கும் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? திருமாவளவன்
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பலவற்றை மறுத்துள்ளது. ஆனால் இந்த கும்பல், பீகாரில் என்ன செய்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து, அதிகாரத்தை பகிர்ந்துகொண்டு, முதல்வர் நிதீஷ்குமாரை ராஜினாமா செய்ய வைத்து, அவரை ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கிவிட்டு, பா.ஜ.க. இன்று பீகாரில் முதல்வர் பீடத்தில் அமர்ந்துள்ளது.
இந்த நிலை தமிழகத்திற்கும் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? வரும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனால் அந்த நாற்காலியில் அவர் தொடர்ந்து அமர்ந்திருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புகிறது என்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன் கூறியுள்ளார்.






