--- --:--:-- --

அமைச்சரவையில் இணையும் நால்வருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கீடு..?

6

மிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2 புதுமுகங்கள் உட்பட 4 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடுத்த பரிந்துரையின்படி ஆளுநர் தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மூன்று அமைச்சர்களை நீக்கியும், புதிதாக நான்கு அமைச்சர்களுக்கு அமைச்சரவையில் பதவியும் வழங்குவதற்கு நேற்று ஒப்புதல் வழங்கியிருந்தார்.

 

இதனையடுத்து இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சா.மு. நாசர் மற்றும் கோவி. செழியன், ஆர். ராஜேந்திரன் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

 

இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாக்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மரபு சாரா எரிசக்தித்துறைகளும், கோவி. செழியனுக்கு உயர்க்கல்வித்துறையும் ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை, கரும்பு கலால் மற்றும் கரும்பு வளர்ச்சி துறையும் சா.மு.நாசருக்கு சிறுபான்மைத் துறை, வெளிநாடு வாழ் தமிழர், அகதிகள் நலன், வக்ஃபு வாரியத்துறை ஆகியத் துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Right Menu Icon