--- --:--:-- --

பாட்னாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு..!

4

பாசிச பாஜக ஆட்சிக்கு எதிராக சமூக நீதி மண்ணில் இருந்து போர் தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பீஹார் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாட்னாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது .

 

பிஹார் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லாலு பிரசாத் யாதவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இதனை தொடர்ந்து நிதிஷ்குமார் முதலமைச்சரை சந்தித்தார்.

 

இந்த சந்திப்புக்கு பிறகு ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாசிச எதேச்ச அதிகாரத்தை ஒன்றிய அரசு அரசு முடிவுக்கு கொண்டு வந்து மதசார்பற்ற ஜனநாயக இந்தியா மீண்டும் மலர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon