--- --:--:-- --

அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள்.. காரணம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்..!

5

நாமக்கல் அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30க்கு மேற்பட்ட மாணவி, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எடுத்த பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. மதிய உணவை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவ, மாணவிகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பள்ளியில் வழங்கப்பட்ட உணவு கெட்டுப் போனதே வாந்தி, மயக்கம் ஏற்பட காரணம் எனக்கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon