தேர்தல் அறிக்கை குறித்து பரிந்துரைகளை தெரிவிக்க இணையதளம் தொடக்கம்..!
தே.மு.தி.க கேட்கும் 14 தொகுதிகளை ஒதுக்க முடியாததால் இழுபறி நீடித்து வருவதாக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தே.மு.தி.க. உடனான கூட்டணி தொடர்பாக விரைவில் நல்ல முடிவு தெரிந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கூறிய நிலையில், ஆட்சி அமைக்க தேவையான எந்த வாய்ப்பையும் இழக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
விரைவில் கூட்டணி தொடர்பாக நல்ல முடிவு தெரிந்துவிடும். ஏற்கனவே அமைக்கப்பட்ட கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் பணிகளை இணைந்து செய்யுங்கள் என்று கூறியுள்ளார். 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து, தமிழக காங்கிரஸ் சார்பில் வரும் இன்று சென்னையில் நடைபெற உள்ள பிரமாண்ட நடைபயணத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பங்கேற்கிறார் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்
விஜய், த.வெ.க.,வை இதுவரை விமர்சிக்க தொடங்கவில்லை. இனி விமர்சிப்பேன். 3, 4 கட்சி மாறியவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 16ம் தேதி புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையையொட்டி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதள பாதை, சாரதாம்பாள் நகரில் உள்ள நீச்சல்குளம் ஆகியவற்றை திறந்த வைக்க உள்ளார்.





