--- --:--:-- --

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 151 ஆக உயர்வு

Landslides in the hills in Wayanad

People walk past debris at a landslide site after multiple landslides in the hills in Wayanad, in the southern state of Kerala, India, July 30, 2024. REUTERS/CK Thanseer

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் கயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையும் இதில் உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், இன்று அதிகாலை தமிழ்நாடு அரசின் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

 

மேலும் தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவ குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர்.

Right Menu Icon