கொலை செய்யப்பட்ட ரவுடி உடல் மீது பதில் சம்பவம் தொடரும் என எச்சரிக்கை..!
புதுச்சேரி வில்லியனூர் அருகே பைக்கில் சென்ற போது வழிமறித்து கொலை செய்யப்பட்ட ரவுடி உடல் மீது பதில் சம்பவம் தொடரும் என சவத்துணி போர்த்தப்பட்ட வாட்ஸ்அப் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இருபது வயது ரவுடி மதன் என்பவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு பைக்கில் சென்றபோது வழிமறித்து மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டான்.
உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த சவத்துணியில் பதில் சம்பவம் தொடரும் என எழுதப்பட்டுள்ளது.






