--- --:--:-- --

காலை உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி..!

6

லால்குடி அருகே அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுமயங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இன்று வழக்கம் போல் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட பத்து மாணவர்களுக்கு மற்றும் ஒன்பது மாணவிகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

மாணவர்களை லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இணை இயக்குனர் லட்சுமி மாணவ மாணவிகளின் உடல் நலம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

 

தற்பொழுது அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு உடற் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

 

Right Menu Icon