--- --:--:-- --

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக தன்னார்வ இரத்ததான முகாம்

2cec9d5a-8cdf-4375-8fb4-17f511bc8344

இராமநாதபுரம் மாவட்டம் கிங்ஸ் பேலஸ் தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பாக நடைபெற்ற தன்னார்வ இரத்ததான முகாமிற்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இரத்ததானம் செய்து துவக்கி வைத்தார்கள்.

மேலும் இம்முகாமில் இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு, இராமநாதபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நடராஜன் மற்றும் மருத்துவ அதிகாரி Dr.சாதிக் அலி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.இந்த முகாமில் மாவட்ட தாலுகா காவல் ஆளினர்கள், ஆயுதப்படை காவல் ஆளினர்கள், கமுதி தனி ஆயுதப்படை காவல் ஆளினர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 113 பேர் இரத்ததானம் செய்தனர்.

இராமநாதபுரம் இரத்தவங்கி மருத்துவர் பத்தூள் ராணி பாத்திமா மற்றும் சிவகங்கை இரத்தவங்கி மருத்துவர் தென்றல் ஆகியோர் தலைமையில் இராமநாதபுரம், சிவகங்கை இரத்த வங்கி மருத்துவ குழுவினர் இரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த முகாமை மாவட்ட இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் திரு.S.அய்யப்பன் ஒருங்கிணைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon