--- --:--:-- --

விருதுநகர்: தனியார் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து

5

விருதுநகர் மாவட்டம் சஞ்சீவி மலை அடிவாரப் பகுதியில் இயங்கிவரும் நூற்பாலையில் பிற்பகல் 1 மணியளவில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் நூற்பாலையில் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நூற்பாலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு, இயந்திரங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Right Menu Icon